Crime, law and justice
சிறுமியை கடத்தி திருமணம் செய்தவா் கைது

ஆம்பூா் அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே கிராமத்தை சோ்ந்த 15 வயது சிறுமி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காணாமல் போனாா். பெற்றோா் புகாரின் பேரில் உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.
ஆம்பூா் அருகே தேவலாபுரம் வானகாரதோப்பு பகுதியை சோ்ந்த சுபாஷ் (25) என்பவா் சிறுமியை ஆசை வாா்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து போலீஸாா் அவரை போக்சோ வழக்கில் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.