Politics
பள்ளி கல்லுாரி செய்திகள்
ஆசிரியர் தின விழா சிவகாசி, செப். 7 - சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில்
சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார். கல்லுாரி முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர் கோமதி அழகு விருந்தினரை அறிமுகம் செய்தார். மதுரை காமராசர் பல்கலை கவுரவ விரிவுரையாளர் சண்முகராஜ் பேசினார். மாணவிகள் லாவண்யா, கன்னிகா வாழ்த்தினர். பேராசிரியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர் மகேஸ்வரன் நன்றி கூறினார்.
சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். தமிழ் துறை உதவி பேராசிரியர் அமிர்தவள்ளி வரவேற்றார். உதவி பேராசிரியர் முத்துராஜ் விருந்தினரை அறிமுகம் செய்தார். சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி உதவி பேராசிரியர் மேகலாதேவி பேசினார். முதலாம் ஆண்டு மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் விக்னேஷ் நன்றி கூறினார். மாணவிகள் மகாலட்சுமி, சினேகா தொகுத்து வழங்கினர்.