Politics
கட்சி தொண்டர்களின் கோரிக்கை நிராகரிப்பு; மம்தா புதிய முடிவு

மேற்குவங்கத்தில் வருகின்ற அக்டோபர் 6 அன்று நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் ஆகிய இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 3 முறை தொடர்ந்து ஆட்சியிலிருந்துவந்த திரிணாமுல் காங்கிரஸ், கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது.
அதே நேரத்தில், அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜியும் தோல்வியடைந்தார். இந்த தேர்தல் தோல்வி, அக்கட்சியைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இதன்காரணமாக, அக்கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் தனி அணியாகச் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கட்சியைக் காப்பாற்றவும், மீண்டும் வலுப்படுத்தவும் மம்தா பானர்ஜி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும் என அக்கட்சியின் தொண்டர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், மம்தா நிச்சயம் இந்த தேர்தலில் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இதனிடையே, திரிணமுல் காங்கிரஸின் அதிகாரத்தைக் கைப்பற்ற அக்கட்சியின் பல்வேறு பிரிவினரிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுபோன்ற காரணங்களால் மம்தா இடைத்தேர்தலில் இருந்து விலகி இருக்கவே முடிவெடுத்துள்ளார்.
மேலும், காங்கிரஸுடனும், தனது கடும் எதிரிகளான கம்யூனிஸ்ட்டுகளுடனும் கூட்டணி அமைக்க மம்தா முடிவெடுத்துள்ளார். தேர்தல் தோல்விக்குப் பின்பு ’இந்தியா’ கூட்டணியை வலுப்படுத்துவதே தனது முக்கிய நோக்கம் என்று செயல்பட்டு வந்த மம்தா, அது தொடர்பான பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)