கார் டயர் வெடித்து விபத்து
வெண்ணந்துார்:ஓசூர், மஞ்சுநாதா நகரை சேர்ந்தவர் சிங்காரம், 59; இவரது மனைவி ரேவதி, 52; தம்பதியின் மகன் சஞ்சய்.

மஞ்சுநாதா நகரை சேர்ந்தவர் சிங்காரம், 59; இவரது மனைவி ரேவதி, 52;
தம்பதியின் மகன் சஞ்சய்.
இவர்கள், கடந்த, 6ல், புதுக்கோட்டையில் உள்ள
உறவினர்களை சந்திக்க காரில் புறப்பட்டனர். நேற்று, ஓசூர்
திரும்பியபோது, சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வெண்ணந்துார்
அருகே, அத்தனுார் அம்மன் கோவில் பகுதி வழியாக சென்றபோது, காரின்
முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார்,
சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில்,
சிங்காரம், ரேவதி ஆகிய இருவரும் காயமடைந்தனர். அவர்கள், சேலம் அரசு
மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக, விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.