Sport
ஒசாகாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய ரைபாகினா..! தரவரிசையில் முதலிடத்துக்கு வாய்ப்பு!

யுஎஸ் ஓபனில் காலிறுதிக்கு முன்னேறிய எலனா ரைபாகினா குறித்து...
வெற்றிக் களிப்பில் எலனா ரைபாகினா. - படம்: ஏபி
கஜகஸ்தானின் எலனா ரைபாகினா யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவில் நவோமி ஒசாகாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இந்தாண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் போட்டிகள் ஆக.23 முதல் செப்.13ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன. இதில் மகளிர் இறுதிப் போட்டி செப்.12ல் நடைபெற இருக்கிறது.
மகளிர் பிரிவில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா - கஜகஸ்தானின் எலனா ரைபாகினா மோதினார்கள். இந்தப் போட்டியில் எலனா ரைபாகினா 6-1, 6-4 என்ற செட்களில் அதிரடியாக வென்றார்.
இந்த வெற்றியுடன் சீன வீராங்கனை ஜெங் கின்வென் உடன் காலிறுதியில் மோதும் எலனா ரைபாகினா அதிலும் வென்றால் உலகின் நம்.1 வீராங்கனையாக மாறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைக்கு நம்.2 இடத்தில் இருக்கும் எலனா ரைபாகினா தனது பலத்தினால் முதலிடத்திக்கு வருவாரா அல்லது அரினா சபலென்கா அதனை தக்க வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இன்றிரவு ரவுன்ட் ஆஃப் 16 சுற்றில் சபலென்கா செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா உடன் மோதவிருக்கிறார். இது குறித்து எலனா ரைபாகினா கூறியிருப்பதாவது:
நிச்சயமாக நான் முதலிடம் பிடிக்க ஆசைப்படுகிறேன். யாருக்குத்தான் இந்த ஆசை இருக்காது. இது எனது லட்சயங்களில் ஒன்றாகவே இருக்கிறது.
எல்லா போட்டிகளையும் ஒரே மாதிரிதான் அணுகுகிறேன். என்னால் முடிந்த அத்தனையும் செய்கிறேன். போட்டி முடியும்வரை போராடுவேன். அடுத்த போட்டியில் என்ன நடக்கிறதென பார்ப்போம் என்றார்.
Elena Rybakina overpowers Osaka, will face Zheng in US Open quarterfinals with a chance to become No.1
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.