Politics
கள்ளக்காதல் தகராறு :த.வெ.க., நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு

பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம், நாட்டார்மங்கலத்தை சேர்ந்தவர் லோகநாதன், 35, அப்பகுதியின் த.வெ.க., கிளை செயலர். இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த குமாரின் மனைவி சூர்யா, 25, என்பவருக்கும் தகாத உறவு இருந்தது.
இதையறிந்த குமார், 30, நேற்று மதியம், லோகநாதனிடம் தகராறு செய்து, அரிவாளால் வெட்டினார். இதில், லோகநாதனின் இடது கையில், இரண்டு விரல்கள் துண்டாகின.
லோகநாதன், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாடாலுார் போலீசார், குமாரை கைது செய்தனர்.