Lifestyle and human interest
சேதமான மேல்நிலை தொட்டியை இடித்து அகற்ற எதிர்பார்ப்பு

சிவகாசி: சிவகாசி அருகே சித்துராஜபுரத்தில் ஊராட்சி அலுவலகம் செல்லும் வழியில் ரோட்டோரத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.
தற்போது தொட்டி முற்றிலும் சேதமடைந்து துாண்கள் வெறும் கம்பிகளால் தாங்கி நிற்கின்றது. ஒரு மாதம் முன்பு வரை பயன்பாட்டில் இருந்த இந்த தொட்டி தற்போது பயன்பாட்டில் இல்லை. மேலும் சேதமடைந்த ரோட்டின் வழியாகத்தான் பட்டாசு ஆலை வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன.
மேலும் அருகில் உள்ள பள்ளி மாணவர்களும் இதனைக் கடந்துதான் சென்று வருகின்றனர். மக்கள் நடமாடும்போது தொட்டி இடிந்து விழுந்தால் மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சேதம் அடைந்த தொட்டியை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.