1.2 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது
கம்பம் செப் 7--: கம்பம் வடக்கு போலீசார் ரகசிய தகவல் அடிப்படையில் கம்பம் உலகத் தேவர் தெரு செவ்வந்தி 31,
கம்பம் செப் 7--: கம்பம் வடக்கு போலீசார் ரகசிய தகவல்
அடிப்படையில் கம்பம் உலகத் தேவர் தெரு செவ்வந்தி 31, என்பவரது வீட்டிற்கு சென்றனர். வீட்டிற்குள் நின்றிருந்த குபேந்திரன் 46, என்பவர் வைத்திருந்த பையில் 1.2 கி.கி., கஞ்சா இருந்தது. அதனை பறிமுதல் செய்து குபேந்திரன், செவ்வந்தியை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய மனோஜ்குமார், ராஜேஸ்வரி ஆகியோரை தேடி வருகின்றனர்.