சாலையில் மணல் குவியல் வாகன ஓட்டிகள் அவதி

விழுப்புரம்: திருச்சி நெடுஞ்சாலையோரத்தில் மணல் குவிந்துள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி அவதியடைந்து வருகின்றனர்.
விழுப்புரம் – திருச்சி நெடுஞ்சாலை வழியாக சென்னை, திண்டிவனம், திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் திருச்சி நெடுஞ்சாலையில் மணல் குவியல், குவியல்களாக குவிந்துள்ளது. இந்த மணல் குவியல்கள் காற்றில் பறப்பதால் வாகன ஓட்டிகள் கண்ணை கசக்கியப்படி செல்கின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, சாலையில் குவிந்துள்ள மணலை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.