Arts, culture, entertainment and media
வலைபாயுதே: Dhanush, Meenakshi Chaudhary, Anaswara Rajan
லைஃப் நம்மளை என்ன வேணா செய்யட்டும். ஆனா, நம்ம லைஃப்ல என்ன செய்றோம்... அதான் முக்கியம். Lemon Tea சிந்தனைகள்.

இரண்டுவிதமான அபிப்ராயங்களை ஒரே நேரத்தில் தன் பிள்ளைகள்மீது வைக்கும் பழக்கம் அம்மாக்களுக்கு உண்டு.
1) எம்புள்ளைக்கு ஒரு விவரமும் தெரியாது, அது அப்பாவி.
2) எம்புள்ளையா... அது ஊரையே வித்திடும்.
கீரையை குக்கரில் வேகவைக்கிறது, மிக்ஸியில் போட்டுக் கடையுறது... இதெல்லாம் இந்த ஜெனரேஷனோட சாபங்கள்.
“என்னயா மூஞ்சில காயம்?”
“மனைவி என்னைத் தூக்கியெறிஞ்சு பேசிட்டா.”
“அதுக்கு எப்படி மூஞ்சில காயம் வரும்?”
“அதான் சொன்னேல்ல தூக்கி எறிஞ்சி பேசிட்டான்னு...”
மொத்த வீட்டையும் க்ளீன் பண்ணின பிறகுதான் பிள்ளையார் கொழுக்கட்டை, சுண்டல் சாப்பிடுவாருன்னு கண்டுபிடிச்சது ஒரு மாமியாராத்தான் இருக்கும்.
போக வேண்டும் என்று முடிவான பிறகு, தோதான வண்டிக்காகக் காத்திருக்கக் கூடாது, நடந்தாவது நகர்ந்துவிட வேண்டும்!
பண்டிகைக்கு ஊருக்குப் போகணும்னு நினைச்சா, முதல்ல கிளாம்பாக்கத்துலயே ஒரு பண்டிகையை முடிச்சுட்டுத்தான் ஊருக்குப் போகணும்போல!
ஆம்னி பஸ்காரங்க விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்காக ரெண்டு வாரத்துக்கு முன்ன கம்மி ரேட்டுக்கு புக் பண்ண டிக்கெட்டையெல்லாம் கேன்சல் பண்ணி விட்டுட்டு, இப்ப அதிக ரேட்டுக்கு வித்துட்டு இருக்கறதா நியூஸ் சேனல்ல செய்தி போட்டிருந்தாங்க.
இன்னைக்கு உண்மையாலுமே நண்பர் ஒருத்தருக்கு ஓசூர்ல இருந்து மதுரைக்கு 1,100 ரூபாய்க்கு புக் பண்ணி இருந்த டிக்கெட்டை போன் பண்ணி “சார் இன்னைக்கு நீங்க புக் பணணின பஸ் பிரேக்டவுன். அதே ரேட்டுக்கு சீட்டர் பஸ் மட்டும்தான் இருக்கு. அதுல போறீங்களா... இல்லை, டிக்கெட்டை கேன்சல் பண்ணிக்கிறீங்களா?”ன்னு கேட்டுருக்காங்க. அவரு கடைசி நேரத்துல எங்க போய் பஸ் தேடுறதுன்னு அந்த பஸ்லயே போக முடிவு பண்ணிட்டாரு.
நியூஸ் பார்த்துட்டு, இவங்க உண்மையைச் சொல்றாங்களான்னு வெரிஃபை பண்ண ரெட் பஸ் ஓப்பன் பண்ணி பார்த்தா அதே பஸ், அதே டைமுக்கு இருக்கு. ஆனா 1,100 ரூபாய்க்கு புக் பண்ணியிருந்த டிக்கெட் விலையை 3,799 ரூபாய்க்கு வித்துட்டு இருக்காங்க.
அத்தனை வெளிப்படையா இந்த ஊழல் நடந்துக்கிட்டேதான் இருக்கு. `விழாக்காலத்துல தான் நாங்க சம்பாதிக்க முடியும்’னு ஒரு ஒப்பாரியை வேற கையில வெச்சுக்கிட்டு இருப்பாங்க.
சுகர் வந்ததும் ‘இனிப்பு’ என்ற வார்த்தை சுவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுகிறது!
வீட்ல யார்கிட்டயாவது போயி, `தலை வலிக்குது’ன்னு சொன்னா, ‘ஆமா, இப்படி Phone-ஐ பார்த்துக்கிட்டே இருந்தா அப்படித்தான்’னு திட்டு விழும். அதுவே இந்த ChatGPT-கிட்ட போய் சொன்னா, ‘எங்க வலிக்குது... என்ன சாப்பிட்டே... நல்லா தூங்குனியா... எப்பிடி வலிக்குது’ன்னு எவ்ளோ அக்கறையா Care பண்ணுது!
ஒரு ஆண் என்னைக்கு Ego-வையெல்லாம் விட்டு, செஞ்ச தப்பு, செய்யாத தப்புன்னு எதுக்குன்னாலும் ஒரு Sorry-யை கேக்குறானோ, அன்னைக்கு அவன் ‘Life is Beautiful’னு உணருவான்.
``முதலீடுகளை ஈர்க்க முதல்வர் லண்டன் போறாரே... அவர்கூட தொழில்துறை அமைச்சர் போயிருக்காருதானே?’’
``அதான் இல்லை. விளையாட்டுத்துறை அமைச்சர் போயிருக்காரு..!’’
அரசு எந்திரத்தின் மீதான குற்றச்சாட்டைத் தனிப்பட்ட பழியாகக் காணும் விநோதம்...குற்றங்கள் பெருகுகின்றன என த.வெ.க-மீது குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் வைத்தால் ‘அது எங்கள் பொறுப்பல்ல. குற்றங்கள் தனிப்பட்ட விவகாரங்களால் நடக்கின்றன. தனிமனித ஒழுக்கம் மேம்பட வேண்டும்’ என விஜய் சொல்கிறார். எனில், அவர் காவல்துறையைக் கலைத்துவிடலாமே!
நியாயமாக, விஜய் தன் கைவசமுள்ள காவல்துறையை எப்படிச் சீர்திருத்தப்போகிறார், என்ன மாதிரி நடவடிக்கைகளைத் திட்டமிட்டுள்ளார் எனப் பேச வேண்டும். வழிப்பறிக் கொள்ளையோ, செயின் பறிப்போ, சிறார் குற்றங்களோ அவற்றைத் தடுக்க அதிக காவலர்களை நியமிப்பது, விழிப்புணர்வு பிரசாரம் நடத்துவது, சீர்திருத்த முயற்சிகளை எடுப்பது குறித்துப் பேச வேண்டும். விஜய்க்கு, இன்னும் தான் ஆட்சி செய்யும் ஆளுங்கட்சி எனும் உணர்வே இல்லை. குற்றச்சாட்டை அவர் தன்மீதும், தன் கட்சிமீதும் வைக்கப்படுவதாகவே காண்கிறார். தனக்குக்கீழ் அரசு எந்திரம் உள்ளதாகவே அவருக்கு நினைப்பில்லை. நிர்வாகம் ஒன்றும் அவர் பண்ணுவதில்லையா... அவரை அதிகாரிகள் சந்திக்கிறார்களா... குழப்பமாக உள்ளதே!
“வாய்க்கு வந்ததையெல்லாம் பேசக் கூடாது. இப்படிப் பேசுவதால்தான் எதிர்க்கட்சி வரிசைகூட இ.பி.எஸ்-ஸுக்குக் கிடைக்கவில்லை.” - அமைச்சர் ரமேஷ்.
# எதிர்க்கட்சி வரிசைகூட இ.பி.எஸ்-ஸுக்குக் கிடைக்கலை. ஆனா இ.பி.எஸ் தலைமையில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ., த.வெ.க-வுக்குக் கிடைச்சிருக்காங்க.
உணவில் Oil-ஐ குறைத்து, Boil-ஐ கூட்டினால், நாம் Soil-க்குப் போகும் நாளைத் தள்ளிப் போடலாம்.
எந்த ஊருக்கு டூர் போலாம்னு எல்லாரும் சீட்டுக் குலுக்கிப் போட்டோம்!
சீட்டைப் பிரிச்சுப் பாத்தா, எவனோ ‘வீட்டுக்கு போலாம்’னு எழுதியிருக்கான் எடுபட்ட பய!
அதைவிட வேகமாக, மழைநீர் நிலத்துக்குள் செல்லும் பரப்பளவும் குறைந்துகொண்டே வருகிறது.
பெரும்பாலான விவாதங்களின் முடிவில் யாருடைய கருத்தும் மாறுவதில்லை. ஆனால் பரஸ்பர மரியாதை குறைகிறது. நட்பு பாதிக்கப்படுகிறது. உறவுகளில் விரிசல் ஏற்படுகிறது. கருத்துகள் அப்படியே இருக்கின்றன. உறவுகள் மட்டும் மாறிவிடுகின்றன!
அதாவது பாருங்க, நாமே கடவுள்கிட்ட ஃபிளைட்ல போற மாதிரி வாழ்க்கை கொடுன்னு கேட்டா, அவரு நமக்கு டவர் கிடைக்காம ஏரோபிளேன் மோட் போடுற வாழ்க்கையைக் கொடுப்பாரு!
நல்ல வாழ்க்கை என்பது பெரிதாக ஒன்றுமில்லை... வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டவன் சிரித்து வாழ்கிறான். தவறவிட்டவன் புலம்பி வாழ்கிறான்.
லைஃப் நம்மளை என்ன வேணா செய்யட்டும். ஆனா, நம்ம லைஃப்ல என்ன செய்றோம்... அதான் முக்கியம். Lemon Tea சிந்தனைகள்.
அக்கறையும் சர்க்கரை மாதிரிதான்… அளவோடு இருந்தால் இனிக்கும்; அளவுக்கு மீறினால், இன்னும் இன்னும் வேணும்னு அதிகம் எதிர்பார்க்க வைக்கும்..!
என்னதான் பிடித்த பாடலை உடனே கேட்கக்கூடிய வசதிகள் பல இருந்தாலும்
எதார்த்தமாக எஃப்.எம் ரேடியோக்களில் கேட்கும் போது கொஞ்சம் கூடுதலாகவே மனம் ரசிக்கச் செய்கிறது.
நம்மளை தூசியா நினைக்கிறவங்களுக்கு நாம தூசியாதான் இருக்கணும். அவங்க கண்ணுக்குள்ள போயி உறுத்திக்கிட்டே இருக்கணும்.
