Politics
சூறாவளி எச்சரிக்கை மீன் பிடிக்க தடை
ராமேஸ்வரம்: சூறாவளி காற்று வீச உள்ளதால் இன்று (செப்.7) முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்தனர்.
வங்க கடலில் இன்று முதல் மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என வானிலை மையம் எச்சரித்தது.
இதனால் முன்னெச்சரிக்கையாக ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்தனர்.
இதையடுத்து ராமேஸ்வரம் கடற்கரையில் 1500 விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் நிறுத்தப்பட்டன. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வீடுகளில் முடங்கினர்.