Politics
பசுமை தாயகம் ஆலோசனை கூட்டம்

தர்மபுரி; தர்மபுரியில் ஒருங்கிணைந்த பசுமை தாயகம் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வீரமணி வரவேற்றார். மாநில துணை செயலாளர் மாது தலைமை வகித்தார்.
நிர்வா-கிகள் ராம்குமார், அருள், மந்திரி படையாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இணைச்செயலாளர் சத்ரியசேகர், தர்மபுரி கிழக்கு மாவட்ட, பா.ம.க., செயலாளர் அரசாங்கம், மாநில துணைத்தலைவர் பாடி செல்வம் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், தர்மபுரி நகராட்சியில் மொத்த-முள்ள, 33 வார்டுகளில் பொது இடங்களில் பூர்வீக நிழல் தரும் மரக்கன்றுகளை நடவு செய்து பராம-ரித்தல். மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரித்து, குப்பை கொட்டும் பகுதிகளை முற்றிலும் ஒழித்து துாய்மைப்படுத்துதல். மண் சாலைகளை சீரமைத்து துாசி இல்லாத தர்மபு-ரியை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பணிகளை நிர்வகிக்க பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா-னங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்