சர்வதேச கழுகு விழிப்புணர்வு தினம்... ஊட்டியில் பாறு கழுகுகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

அழிவின் விளிம்பில் உள்ள பாறு கழுகுகளைப் பாதுகாக்கும் நோக்கில் உலக பாறு கழுகுகள் பாதுகாப்பு தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உலக பாறு கழுகுகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு தனியார் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஊட்டி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அன்னியச் செடிகளை அகற்றுதல் மற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அழிவின் விளிம்பில் உள்ள பாறு கழுகுகளைப் பாதுகாக்கும் நோக்கில் உலக பாறு கழுகுகள் பாதுகாப்பு தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், பாறு கழுகுகள் குறித்து அனைவரும் அறியும் விதமாக, ஊட்டி கலைக் கல்லூரி மைதானத்தில் தனியார் அமைப்பினர் கழுகு வடிவத்தில் நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கலைக் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, வினாடி வினா போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
