போதை மாத்திரை விற்ற இருவர் கைது
சென்னை, செப். 7– சென்னை மாங்காடு அருகே போதை மாத்திரை விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர். கோவூர்
சென்னை மாங்காடு அருகே போதை மாத்திரை விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
கோவூர் தைலந்தோப்பு பகுதியில் நேற்று மாங்காடு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சந்தேகமாக சுற்றி திரிந்த இருவரை பிடித்து சோதனை செய்தபோது, அவர்களிடம் இருந்த பையில், 500 போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், பிடிப்பட்டவர்கள், சென்னை, பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த கவுதம், 24, மாங்காடை சேர்ந்த மனோகரன், 21, என்பதும், இவர்கள் மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து விற்பனை செய்ததும் தெரிந்தது. போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.