இறைச்சி கடையில் ரூ.25 ஆயிரம் திருட்டு
திருப்போரூர், செப். 6– வெங்கூர் கிராமத்தில் உள்ள கோழி இறைச்சி கடையின் பூட்டை உடைத்து, 25 ஆயிரம் ரூபாய்
வெங்கூர் கிராமத்தில் உள்ள கோழி இறைச்சி கடையின் பூட்டை உடைத்து, 25 ஆயிரம் ரூபாய் மற்றும் 10 கோழிகளை திருடி
சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்போரூர் அடுத்த மேலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரி. 45, இவர், திருப்போரூர் – செங்கல்பட்டு சாலை, வெங்கூர் கிராமத்தில் கோழி இறைச்சி கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.
பின், நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாபெட்டியில் இருந்த 25 ஆயிரம் ரூபாய், ஒரு காஸ் சிலிண்டர், கோழி சுத்தம் செய்யும் இயந்திரம், 10 கோழிகள் திருடப்பட்டிருந்தது தெரிந்தது. திருப்போரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.