காப்பாற்றுங்கள்! பள்ளி மாணவன் கதறல்!

நெல்லை மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் யானைகள், கரடி, சிறுத்தை, கடமான், சிங்கவால் குரங்கு, உடும்பு, காட்டுப் பன்றி, செந்நாய்க்கூட்டம், மிளா உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது கோடை தாண்டியும் வெயில் வாட்டுவதால் தண்ணீருக் காகவும், உணவுக்காகவும் தரையிறங்கி வருகின்றன.
தற்போது 3 கரடிகள் ஒரேநேரத்தில் இரவுவேளையில் மேற்படி குடியிருப்பு பகுதிகளில் சுற்றிவருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக இரவு நேரங்களில் வேலைமுடிந்து விடுதிரும்பும் விவசாயக் கூலிகள் அத்தியாவசியத் தேவையின் பொருட்டு பொருட்கள் வாங்க வெளியே செல்லும்பொது மக்கள் ஒருவித அச்சத்துடனேயே சென்றுவரவேண்டிய சூழல்.
உணவு, தண்ணீரைத் தேடி கரடிகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துவிடும் என்கிற அச்சமும் நிலவிவருகிறது. இரவில் இரை தேடிவரும் இந்த கரடிகள் வழியோரத்திலுள்ள சிறுசிறு கோவில்களின் உள்ளே நுழைந்து அங்கு எரிகிற தீபத்தின் எண்ணெய் முழுவதையும் குடித்துவிட்டுச் செல்வது வாடிக்கையாகியுள்ளது.
வி.கே.புரம் பகுதியில் தொடர்ந்து கரடிகளின் நடமாட்டம் காணப்பட்டு வருகிறது. தற்போது 20-க்கும் மேற்பட்ட கரடிகள் இந்தப் பகுதியில் உலா வருகின்றன. சில கரடிகள், குட்டிகளுடன் வரும்போது பொதுமக்கள் பார்த்தால் அவர்களை விரட்டி விரட்டித் தாக்குகின்றன. பொதுமக்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு கரடி களின் நடமாட்டத்தைத் தடுக்கவேண்டும். அவைகளைக் கூண்டுவைத்துப் பிடிக்க வேண்டும் என்று வனத்துறைக்கு கோரிக்கை வைத் துள்ளனர்.
இந்தக் கரடி களின் நடமாட்டத்தால் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு சென்றுவரவேண்டிய நிலை. இதனிடையே வி.கே.புரம் டாணா அனவன்குடியிருப்பைச் சேர்த்த சந்திரன் என்பவரின் மகனும் வி.கே.புரம் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்துவரும் மாணவனான நரேந்திரகுமாரும் வனத்துறையினருக்கு வீடியோ மூலம், "எங்கள் பகுதி மலையடிவாரத்தில் இருப்பதால் நாள் தோறும் கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்கு களின் தொந்தரவு அதிகளவு உள்ளது. இதனால் நாங்கள் சுதந்திரமாக வெளியே நடமாடமுடியா மல் அச்சத்திலும் பீதியிலும் இருக்கிறோம். படிப்பில் கவனம் செலுத்தமுடியவில்லை. எங்கள் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையில் பள்ளி சென்றுவருகிறோம் எங்களை காப்பாற்றுங்கள்'' என வேண்டுகோள் விடுத்துள்ளது வைரலாகிக் கொண்டிருக்கிறது.
இதுகுறித்து வனச்சரகர்கள், "கரடிகள் பற்றிய புகார் வருகிறபோது நாங்களும் கூண்டுவைத்து பிடித்து அவைகளை அடர்வனப் பகுதிகளில் விட்டுவிடுவோம். ஆனாலும் தொடர்ந்து வன விலங்குகள் இரைதேடி வருவது எங்களுக்கு சவாலாக இருக்கிறது. தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்''’என்கிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
