மண் கடத்திய டிப்பர் லாரி, பொக்லைன் பறிமுதல்
தாரமங்கலம்: கருப்பூர் வருவாய் ஆய்வாளராக அசோக்குமார், 51, என்பவர் பணிபுரிகிறார். இவருக்கு முத்தநா-யக்கன்பட்டி அருகே செம்மண்கூடல் பகுதி புறம்-போக்கு நிலத்தில், அனுமதியின்றி மண் எடுப்ப-தாக நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:45 மணிக்கு தகவல் கிடைத்தது. அவர் வி.ஏ.ஓ., ஆனந்தபாபு-வுடன் அங்கு சென்றார்.
அப்போது பொக்லைன் இயந்திரம் மூலம், 3 யூனிட் மண்ணுடன் நின்றிருந்த டிப்பர் லாரி மற்றும் மண் நிரப்ப தயாராக இருந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இரு டிப்பர் லாரி, பொக்லைன் இயந்திரத்தை ஆர்.ஐ., அசோக்குமார், தாரமங்கலம் போலீசில் ஒப்ப-டைத்து புகார் அளித்தார்.தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வரு-கின்றனர்.