தேனியில் பெண்ணை கொலை செய்து மூடையில் கட்டியவர் கைது

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த அம்சவள்ளி 38, என்பவரை கொலை செய்து உடலை சாக்கு மூடையில் கட்டி வைத்திருந்த அல்லிநகரத்தை சேர்ந்த அப்துல்ரகுமானை 36, போலீசார் நேற்று கைது செய்தனர்.
தேனி அல்லிநகரத்தை சேர்ந்த பரோட்டோ மாஸ்டர் அப்துல்ரகுமான். மூன்று ஆண்டுகளாக பழனிசெட்டிபட்டி சவுடேஸ்வரி நகரில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு அலைபேசியில் பெரியகுளம் வடகரை அழகர்சாமிபுரம் சி.எஸ்.ஐ., சர்ச் கோட்டை மேடு தெருவை சேர்ந்தவர் கண்ணன் மனைவி அம்சவள்ளி அறிமுகமானார். வீட்டிலிருந்த அம்சவள்ளியை செப்.,9ல் காணவில்லை என வடகரை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். அம்சவள்ளி அலைபேசியில் கடைசியாக அப்துல்ரகுமானிடம் பேசியது தெரிந்தது. அலைபேசியின் இருப்பிடத்தை கண்காணித்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று மாலை பழனிசெட்டிபட்டியில் உள்ள அப்துல்ரகுமான் வீட்டிற்கு போலீசார் சென்று கதவை தட்டினர். கதவு உள்புறம் பூட்டப்பட்டிருந்தது. உடைக்க முற்பட்ட போது அப்துல்ரகுமான் கதவை திறந்து வெளியே வந்தார். வீட்டினுள் துர்நாற்றம் வீசியது. சாக்கு மூடையில் அம்சவள்ளி உடல் இருந்தது. போலீசார் உடலை கைப்பற்றி நடத்திய விசாரணையில், 'கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் அம்சவள்ளியுடன் தகராறு ஏற்பட்டது.
அப்போது கல்லால் தாக்கியதில் அவர் உயிரிழந்தது தெரிந்தது. உடலை சாக்குமூடையில் கட்டியுள்ளார்.
அப்துல்ரகுமானை கைது செய்து பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.