”தொடரும் சாதி@க் கொடுமைகள்”; பட்டியலினப் பெண்ணின் விவசாய நிலத்தில் நடந்த களேபரம்

கர்நாடக மாநிலம், வேனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், விவசாய நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்த ஒருவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண்ணை சாதி ரீதியாக இழிவுபடுத்தி, கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண், செப்டம்பர் 7 அன்று மற்றவர்களுடன் விவசாய நிலத்தில் (பண்ணை) பணியாற்றிக் கொண்டிருந்தபோது, பெல்தங்கடி ஹோசங்கடியைச் சேர்ந்த ஹனீஃப் என்பவர், அங்கு வந்து வேலை செய்துகொண்டிருக்கும் பண்ணையில் அத்துமீறி நுழைந்துள்ளார்.
பின்னர், அப்பெண்ணை அவர் சாதி ரீதியாக இழிவுபடுத்தியும், ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியும், கொலை மிரட்டல் விடுத்தும், அவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளார். மேலும், விவசாயப் பயிர்கள் மற்றும் வேலிக்குச் சேதம் விளைவித்து, சுமார் ரூ. 1.30 லட்சம் மதிப்பிலான இழப்பையும் ஏற்படுத்தியுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், செப்டம்பர் 8 அன்று வேனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சம்பவத்தில் ஈடுபட்ட ஹனீஃப் என்பவரைக் கைது செய்தனர்.
பின்பு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. மேலும், சம்பவம் குறித்து வேனூர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாதி ரீதியாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், பாரதிய நியாய சன்ஹிதா, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம் ஆகியவற்றின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)