Politics
குப்பைகளை தரம் பிரித்து வழங்க கோரி கேத்தி பேரூராட்சி தீவிர விழிப்புணர்வு
ஊட்டி : ஊட்டி அருகே, கேத்தி பேரூராட்சி வார்டு பகுதிகளில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து, செயல்

ஊட்டி அருகே, கேத்தி பேரூராட்சி வார்டு பகுதிகளில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து, செயல் அலுவலர் புவனேஸ்வரி தலைமையில், பேரூராட்சி தலைவர் ேஹமமாலினி முன்னிலையில், மன்ற உறுப்பினர்கள் வார்டு வாரியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதில், பொதுமக்கள் தங்களது குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என, தரம் பிரித்து வழங்கினால் சுகாதாரத்தை பாதுகாத்து மறு சுழற்சி முறையை மேம்படுத்த முடியும். தினசரி துாய்மை பணியாளர்களிடம் காய்கறி, பழத்தோல்கள், உணவு பொருட்கள் போன்ற மக்கும் குப்பைகளை தனியாகவும், பிளாஸ்டிக், கண்ணாடி போன்ற மக்காத பொருட்களை தனியாகவும், ரப்பர் மற்றும் துணி வகைகளை தனியாகவும், மருத்துவ கழிவுகளை தனியாகவும் நான்கு வகைகளாக பிரித்து வழங்க வேண்டும். என, தெரிவிக்கப்பட்டது.
செயல் அலுவலர் புவனேஸ்வரி கூறுகையில், ‘ சுகாதாரத்தை பேணி காக்கும் வகையில், வார்டு வாரியாக குப்பைகளை நான்கு வகைகளாக பிரித்து வழங்குவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். வார்டு பகுதிகளை சுகாதாரமாக வைத்து கொள்ள பொதுமக்கள் நான்கு வகைகளாக குப்பைகளை பரித்து வழங்கி பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்.’’ என்றார்.
