Politics
சிறுமி பாலியல் பலாத்காரம்வாலிபருக்கு 22 ஆண்டு சிறை

சிவகங்கை: காரைக்குடியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 22 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் கார்த்திகேயன் 26. இவர் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை செய்தார். இவருக்கும் காரைக்குடி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் 2021 ஜூலையில் முகநுால் மூலம் பழக்கம் ஏற்பட்டது. சிறுமியை கார்த்திகேயன் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி 2021 ஜூலை 27 ல் திருப்பூருக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
கார்த்திகேயனை போக்சோ வழக்கில் காரைக்குடி போலீசார் கைது செய்தனர். வழக்கு விசாரணை சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. கார்த்திகேயனுக்கு 22 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ரோகிணி தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் தனலட்சுமி ஆஜரானார்.