Politics
இளைஞர் விழாபுதுகை மாணவி தேர்வு
சிவகங்கை,செப்.11- ரஷ்யாவின் எகாடெரின்பர்க் நகரில் இன்று முதல் 17ஆம் தேதி வரை சர்வதேச இளைஞர் விழா மாநாடு
ரஷ்யாவின் எகாடெரின்பர்க் நகரில் இன்று முதல் 17ஆம் தேதி வரை சர்வதேச இளைஞர் விழா மாநாடு நடக்கிறது.
பல்வேறு நாடுகளில் இருந்து பங்கேற்கும் மாணவர்கள் தங்கள் கல்வி, கலாசாரம், மொழி மற்றும் இளைஞர் நலன் சார்ந்த கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர். இதில் பங்கேற்க இந்தியா சார்பில் 18 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகம் சார்பில் புதுகை லேனாவிலக்கு மவுண்ட் சீயோன் சர்வதேச பள்ளி பிளஸ் 2 மாணவி அனுஸ்ரீ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பள்ளி தலைவர் ஜோனத்தன் ஜெயபரதன், இணைத் தலைவர் ஏஞ்சலின் ஜோனத்தன், முதல்வர் ஜலஜாகுமாரி, ஆசிரியர் ரங்கசாமி பாராட்டினர்.