Economy, business and finance
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய கனடாவுக்கு அழைப்பு!

ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டத்தில் கனடா பிரதமர் மார்க் கார்னி... - ஏபி
ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக இணைவதற்கு கனடாவுக்கு அந்த அமைப்பின் தலைவர் உருசுலா வொன் டெர் லெயன் அழைப்பு விடுத்துள்ளார்.
ஐரோப்பாவைச் சேர்ந்த 27 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக இணையுமாறு வட அமெரிக்காவைச் சேர்ந்த கனடாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி, ஸ்ட்ராஸ்பர்க் நகரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இன்று (செப். 16) கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது, அந்த அமைப்பின் தலைவர் உருசுலாவை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
இந்த நிலையில், காலநிலை மாற்றம், செய்யறிவு, ஆர்டிக், உக்ரைன் மற்றும் புவிசார் அரசியல் ஆகிய விவகாரங்களில் கனடாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரே அணுகுமுறையைப் பின்பற்றுவதால் இந்த அழைப்பு விடுக்கப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உருசுலா தெரிவித்துள்ளார்.
“இது வேறு யாருக்கும் எதிரான கூட்டணி இல்லை. நம் கூட்டு வலிமையை மேம்படுத்தும் ஒரு முயற்சியாகும். கனடா உடனான உறவை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல நாங்கள் விரும்புகிறோம்.
அன்புள்ள மார்க் (கனடா பிரதமர்) நம் கூட்டுறவுகளை நாம் அவசரமாக மறுபரிசீலினை செய்ய வேண்டும் என நான் ஏற்கெனவே கூறியிருக்கிறேன். எனவே, ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் “இணை உறுப்பினராக” கனடா இணைவதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இத்துடன், கனடாவுக்கு வழங்கப்படும் இந்தப் பதவியானது தற்போது புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பதவியின் விவரங்கள் குறித்து இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Ursula von der Leyen, the head of the European Union, has invited Canada to join the bloc as its first associate member.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.