Politics
த.வெ.க., மாவட்ட செயலாளரிடம் புதிய நிர்வாகிகள் வாழ்த்து
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் புதியதாக நியமிக்கப்பட்ட த.வெ.க., நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் சீனிவாசனை, சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.
பரங்கிப்பேட்டை நகர த.வெ.க., அமைப்பு செயலாளராக நாசர் அலி மற்றும் பரங்கிப்பேட்டை நகர கிழக்கு செயலாளராக ஆனந்தன் நியமிக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகள், கடலுார் தெற்கு மாவட்ட செயலாளர் சீனிவாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
நிகழ்ச்சியில், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் சக்தி ஆகாஷ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.