Politics
காங்., கமிட்டி மறு சீரமைப்பு கூட்டம்
பெ.நா.பாளையம், செப். 11- துடியலூர் அருகே உள்ள வடமதுரையில் பெரியநாயக்கன்பாளையம் வட்டார காங்., கமிட்டி மறு
துடியலூர் அருகே உள்ள வடமதுரையில் பெரியநாயக்கன்பாளையம் வட்டார காங்., கமிட்டி மறு சீரமைப்பு கூட்டம் நடந்தது.
மாவட்ட காங்., தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட முன்னாள் தலைவர் மணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரத் தலைவர் மோகன்ராஜ் வரவேற்றார். மேலிட பொறுப்பாளர் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், 55 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படும். மூத்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கட்சியை பலப்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து, நிர்வாகிகளிடம் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் பெறப்பட்டன. பூத் வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, 10 பூத்துகள், ஒரு மண்டலம் வீதம், 19 மண்டலங்களாக பிரிக்க முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் மகேஷ் குமார், மாவட்ட துணை தலைவர்கள், நகர மற்றும் கிராம காங்., நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வட்டார செயலாளர் தம்பி பார்த்திபன் நன்றி கூறினார்.