Politics
ஆசிரியர் தின விழா
மானாமதுரை: மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது. பள்ளி நிறுவனர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். நடனம்,பேச்சு, கவிதை, பட்டிமன்றம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. பள்ளி தாளாளர் கபிலன், நிர்வாகி மீனாட்சி, முதல்வர் சாரதா வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
திருப்புத்தூர்: பாபா அமீர் பாதுஷா மெட்ரிக் பள்ளி விழாவிற்கு தாளாளர் பாபா அமீர் பாதுஷா தலைமை வகித்தார். துணை முதல்வர் சங்கர் முன்னிலை வகித்தார். ஆசிரியை துர்கா வரவேற்றார். ஆசிரியை ஜெயப்பிரியா நன்றி கூறினார்.
தேவகோட்டை: ஜமீன்தார் உயர்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு காஞ்சி காம கோடி பீட செயலர் கோபாலன் தலைமை வகித்தார். பள்ளி செயலர் வெங்கடேசன் வரவேற்றார். காரைக்குடி சிக்ரி முன்னாள் இயக்குநர் சுந்தரம், பள்ளி முகவாண்மை குழு தலைவர் மலையப்பன், பள்ளி குழு தலைவர் சொர்ணசுந்தரேசன், பட்டதாரி ஆசிரியர்கள் அஜிதா, நந்தினி, ஜெனிபர் பரிசுகள் வழங்கினர். ஆசிரியர் ஜெனிபர் நன்றி கூறினார்.