சாத்துக்குடி மூன்று கிலோ ரூ.100
திருப்புவனம்,செப்.10- திருப்புவனத்தில் நேற்று சரக்கு வாகனங்களில் மூன்று கிலோ சாத்துக்குடி பழம் நுாறு
திருப்புவனத்தில் நேற்று சரக்கு வாகனங்களில் மூன்று கிலோ சாத்துக்குடி பழம் நுாறு ரூபாய் என கூவி கூவி விற்பனை செய்யப்பட்டன.
தமிழகத்தில் கோடை காலங்களில் சாத்துக்குடி, திராட்சை உள்ளிட்ட பழங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படும், சாலையோரம் பலரும் பழங்களை குவித்து வைத்து விற்பனை செய்வார்கள், கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு கிலோ சாத்துக்குடி கிலோ 60 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
சாத்துக்குடி ஜூஸ் 250 மி.லி., 40 முதல் 75 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. நேற்று சரக்கு வாகனங்களில் சாத்துக்குடி பழங்கள் மூன்று கிலோ 100 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டதால் பலரும் வாங்கிச் சென்றனர்
வியாபாரிகள் கூறுகையில், ஆந்திராவில் கடப்பா, அனந்தபூர் உள்ளிட்ட பகுதிகளில் சாத்துக்குடி விளைச்சல் அதிகரித்துள்ளது. வெயிலின் தாக்கத்தால் மேலும் அப்பகுதியில் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அங்கிருந்து மொத்தமாக வாங்கி வந்து மதுரையில் இருந்து சரக்கு வேன்களில் ஊர் ஊராக சென்று விற்பனை செய்து வருகிறோம், என்றனர்.