Arts, culture, entertainment and media
குன்றத்தில் தயாராகும் மெகா விநாயகர் சிலைகள்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் விநாயகர் சதுர்த்திக்காக 'மெகா சைஸ்' விநாயகர் சிலைகள் தயாராகின்றன.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்காக திருப்பரங்குன்றத்தில் அகில பாரத அனுமன் சேனா, ஹிந்து மக்கள் கட்சி சார்பில் பிரதிஷ்டை செய்யப்படுவதற்காக 3 அடி முதல் 10 அடி உயரமுள்ள பல்வேறு வடிவங்களில் காகிதக் கூழ், மரவள்ளிக் கிழங்கு மாவில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி நடக்கிறது. அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ராமலிங்கம் கூறியதாவது: எங்கள் அமைப்பு சார்பில் பாகுபலி விநாயகர், கருட வாகன விநாயகர், சிம்ம வாகன கணபதி, நாக கன்னி , சிறுத்தை, குதிரை மேல் விநாயகர்கள், சிவன், பார்வதி, விநாயகர், காமதேனு விநாயகர், மயில் விநாயகர் உள்பட பல்வேறு சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. எங்கள் பயன்பாட்டுக்குப் போக, மீதியுள்ளவற்றை விற்க உள்ளோம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பேப்பர் கூழ், மரவள்ளிக் கிழங்கு மாவு கலவையில் மட்டுமே விநாயகர் சிலைகள் தயாரித்து, வாட்டர் அடிக்கிறோம் என்றார்.