Crime, law and justice
இளம்பெண் பலாத்காரம் நான்கு சிறார்கள் சிக்கினர்
திருச்சி: திருச்சியில், 16 வயது இளம்பெண்ணை பலாத்காரம் செய்த, 14 வயதுடைய நான்கு சிறார்களை, போலீசார் கைது செய்தனர்.
திருச்சி, காந்தி மார்க்கெட்டை சேர்ந்த, 16 வயது இளம்பெண், உறவினர் அரவணைப்பில் வளர்கிறார். மனநலம் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணை, அதே பகுதியை சேர்ந்த, நான்கு சிறார்கள் பலாத்காரம் செய்துள்ளனர்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை, திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதித்தனர். கோட்டை மகளிர் போலீசார், போக்சோ வழக்கு பதிந்து, பள்ளியில் படிக்கும், 14 வயதுடைய நான்கு சிறார்களை கைது செய்து, தஞ்சையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.