ஆண்டு முழுதும் மகசூல் கொடுக்கும் பந்தல் புடலங்காய்
புடலங்காய் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பி.பால்ராஜ் கூறியதாவது:
தோட்டக்கலை பயிர்களான புடலங்காய், சுரைக்காய் உள்ளிட்டவற்றை பந்தல் அமைத்து காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். அந்த வரிசையில், குட்டை ரக புடலங்காய் சாகுபடி செய்துள்ளேன். நட்டு, 50வது நாளில் காய்கள் காய்க்க தொடங்கும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் அறுவடை செய்யலாம்.
ஒரு ஏக்கர் பரப்பளவில், பந்தல் புடலங்காய் சாகுபடி செய்தால், ஒவ்வொரு அறுவடைக்கும், 200 கிலோ புடலங்காய் அறுவடை செய்ய முடியும்.
குறிப்பாக, எருக்கு, நெச்சி, தும்மை உள்ளிட்ட 10 இலை கரைசலை, ஒவ்வொரு அறுவடைக்கு பிறகும் தெளிக்க வேண்டும். மேலும், பூச்சி தாக்குதல் ஏற்படும் போது, தெளித்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
பந்தல் காய்கறிகளை பொறுத்தவரையில், ஒரு ஆண்டு வரையில் தடையின்றி மகசூல் பெறலாம். விவசாயிகள் விற்பனை திறனை மேம்படுத்தி கொண்டால், அதிக வருவாய் ஈட்ட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
96261 03785.