Arts, culture, entertainment and media
சிறந்த நடிகைக்கான விருது வென்ற சிம்ரன்!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சிம்ரன், டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பிற்காக SIIMA 2026-ல் சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார். திரையுலகில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தனக்கான ஒரு வலுவான கதாபாத்திரத்தின் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற சிம்ரன், டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் தனது கதாபாத்திரத்தை மிக இயல்பாகவும் உணர்வுப்பூர்வமாகவும் வெளிப்படுத்தியிருந்தார். அவரது நடிப்பு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பாராட்டுகளைப் பெற்ற நிலையில், தற்போது அந்த நடிப்பிற்கான அங்கீகாரமாக SIIMA விருது கிடைத்துள்ளது.
பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கியுள்ள சிம்ரனுக்கு, இந்த விருது அவரது திரைப்பயணத்தில் மற்றுமொரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. “மீண்டும் இந்தப் போட்டியில் நான் இருக்கிறேன்” என்பதை தனது தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களாலும், சிறப்பான நடிப்பாலும் நிரூபித்திருக்கும் சிம்ரனுக்கு இந்த SIIMA அங்கீகாரம் மேலும் ஒரு மகுடமாக அமைந்துள்ளது. மேலும், டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் SIIMA 2026-ல் மொத்தம் 6 விருதுகளை வென்று, அந்த விழாவில் அதிக விருதுகளைப் பெற்ற தமிழ் திரைப்படமாகவும் கவனம் பெற்றுள்ளது. படத்தின் நடிகர்கள், இயக்குநர், தயாரிப்பாளர் உள்ளிட்ட திரைப்படக் குழுவினர் தங்களுக்கான விருதுகளைப் பெற்று மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)