Politics
பாதுகாப்பு காரணங்களால் லண்டனில் முதல்வர் விஜய் நிகழ்ச்சி ரத்து

லண்டன்: பாதுகாப்பு காரணங்களுக்காக லண்டனில் விஜய் பங்கேற்க இருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்தப் பயணத்தின் போது, ரூ.12,300 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, லண்டனில் மிக உயரமான கட்டடமான தி ஷார்ட் முன்பு, பொதுவெளியில் முதல்வர் விஜய், ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அவரைக் காண, அளவுக்கு அதிகமாக கூட்டம் கூடியது. இதனால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக, முதல்வர் விஜய் பங்கேற்க இருந்த இந்த நிகழ்ச்சியை போலீசார் ரத்து செய்தனர்.
இது அவரை காண்பதற்காக திரண்டிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
பாதுகாப்பு தொடர்பான காரணங்களால், போலீசாரின் அனுமதி இல்லாததால், இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக முதல்வர் குழுவினர் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பை வெளியிட்டனர்.