Politics
டயலாக் 2.0!
“தங்கம் வாங்குவதைத் தவிர்க்கணும்னு மோடி சொல்லியிருக்காராம். அதனாலதான்!” | dialogue 2.0 september 09 2026

(டயலாக் பகுதியில் இடம்பெறும் நகைச்சுவைத் துணுக்குகளுக்கு தலா ரூ.250 பரிசளிக்கப்படும்)
கும்பகோணம் காந்தி பார்க்கில் வாக்கிங் செல்லும் இரண்டு பெண்மணிகள்...
“என் வீட்டுக்காரர் திடீர்னு பிரதமர் மோடியைப் புகழ ஆரம்பிச்சிருக்காரு...”
“அடடே... எப்ப பார்த்தாலும் அவரைத் திட்டிக்கிட்டே இருக்கிறவராச்சே... இப்போ என்ன ஆச்சு?”
“தங்கம் வாங்குவதைத் தவிர்க்கணும்னு மோடி சொல்லியிருக்காராம். அதனாலதான்!”
சென்னை மெரீனா பீச்சில் குதிரைக்காரரும், சவாரி செய்ய வந்த குழந்தையின் தந்தையும்...
“என்னய்யா... குதிரையில ஒரு ரவுண்ட் போக 100 ரூபாய் கேக்குற... 70 ரூபாய்க்கு வர்றியா?”
“முடியாது சார்...”
“சரிய்யா... 80 ரூபாய் தாரேன்?”
“குதிரைப் பேரம் கேள்விப்பட்டிருக்கேன். குதிரைச் சவாரிக்கே இப்படிப் பேரம் பேசுறீங்களே... நீங்க என்ன அரசியல்வாதியா சார்?”
சென்னை வாக்கிங் செல்லும் இருவர்...
“ ‘காங்கிரஸ் பாயும் புலியாக மாறிவருகிறது’ன்னு அமைச்சர் விஸ்வநாதன் பேசினதைப் பார்த்தீங்களா சார்?’’
``தி.மு.க கூட்டணியிலிருந்து த.வெ.க பக்கம் ‘பாய்ந்ததை’ சொல்றார்போல..!”
திருவையாறு காவிரி பாலத்துக்கு அருகில் இருவர்...
“என்னப்பா மேகதாது அணையை திறந்துட்டாங்களாமே?!”
“யோவ் அதை இன்னும் கட்டவே இல்லை. மேட்டூர் அணையிலதான் தண்ணீர் திறந்திருக்காங்க. நாட்டு நடப்புத் தெரியாம எதையாவது உளறிக்கிட்டுருக்காத!”
ஆசிரியர், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002.
dialogue@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!
