Politics
ரூ.5000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய லைன்மேன் கைது
தென்காசி: தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன், 42. இவர் 6.5 ஏக்கர் நிலத்தில் தென்னை மரங்கள் வைத்து விவசாயம் செய்து வருகிறார்.
அந்த நிலத்திற்கு இலவச மின் இணைப்பு பெற்றுள்ளார். அந்த தோட்டத்தில் 2 பேஸ், 3 பேஸ் மின்சாரம் மாறி மாறி வருவதாகவும், சில சமயங்களில் கண்டன்சர் வைத்து மோட்டாரை இயக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கடையநல்லுார் மின்வாரிய அலுவலகத்தில் லைன்மேனாக பணிபுரியும் விஜய் 39 'அவ்வாறு கண்டன்சர் பொருத்திய மின் இணைப்பை போட்டோ பிடித்து வைத்துக்கொண்டு அதனை உயர் அதிகாரிகளிடம் காண்பித்தால் உங்களுக்கு ரூ. 1.5 லட்சம் அபராதம் விதிப்பார்கள். அவர்களுக்கு தெரியாமல் இருக்க தனக்கு ரூ. 25 ஆயிரம் லஞ்சம் தருமாறு கேட்டார். பின்னர் குறைந்தபட்சம் ரூ. 5000 லஞ்சம் கேட்டார்.
இதுகுறித்து முருகேசன், தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.
ஆக.28ல் தொலைபேசியில் பேசியபோது, ரூ.5000 தருமாறு விஜய் மீண்டும் கேட்டார்.
இதையடுத்து போலீசார் அறிவுறுத்தலின்படி, நேற்று கடையநல்லுார் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் வைத்து
விஜயிடம், முருகேசன் ரூ.5000 வழங்கினார். அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி. பால் சுதர் தலைமையிலான போலீசார் விஜயை கைது செய்தனர்.