தலை துண்டித்து வாலிபர் கொலை
திருநெல்வேலி: தென்காசி மாவட்டம், பொட்டல்புதுார் அருகே பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் சந்தானம், 28. இவர், நேற்று இரவு 9:30 மணியளவில், வேன் ஸ்டாண்ட் அருகே நின்றிருந்தார்.
அங்கு, டூ - வீலரில் வந்த இருவர், சந்தானத்தின் கழுத்தில் அரிவாளால் வெட்டினர். இதில், தலை துண்டிக்கப்பட்டு சந்தானம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கடையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.