தவறான சிகிச்சையால் சிறுமி இறப்பு டாக்டர் மீது நடவடிக்கை கோரி முறையீடு
ஈரோடு:தவறான சிகிச்சையால், தனது குழந்தை இறந்து விட்டதாக கூறி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டரின்
சிகிச்சையால், தனது குழந்தை இறந்து விட்டதாக கூறி, ஈரோடு கலெக்டர்
அலுவலகத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது)
தேன்மொழியிடம், நாமக்கல் தாலுகா காளிசெட்டிபட்டி, போயர் தெருவை
சேர்ந்த சரவணன் மனைவி ரேணுகாதேவி, 33, என்பவர், நேற்று புகார் மனு
எனது கணவர் கட்டட மேஸ்திரியாக உள்ளார்.
எனக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். அதில், பிரதிக்ஷா, 7, என்ற
மகளுக்கு தொப்புள் பெரிதாக இருந்ததால், நாமக்கல், வெங்கடேஷ் நர்சிங்
ேஹாமில் சிகிச்சைக்கு அணுகினோம். டாக்டர் வெங்கடேஷ்
ஆலோசனையின்படி, நாமக்கல், சபரி மருத்துவமனையில் ஸ்கேன் செய்து,
ரிப்போர்ட் வழங்கினோம். குழந்தையின் தொப்புளில் சிறிய ஆப்ரேஷன்
செய்தால் சரியாகும் எனக்கூறி கடந்த, 7ல் வெங்கடேஷ் நர்சிங் ேஹாமில்
சேர்ந்தோம்.
கடந்த, 8 மதியம், 1:00 மணிக்கு ஆப்ரேஷன் செய்ய
சென்றபோது, எனது மகள் முழு ஆரோக்கியத்துடன், சிரித்து கொண்டே
சென்றார். மதியம், 3:00 மணிக்கு குழந்தையின் முதுகில் மயக்க ஊசி
செலுத்தியதில், பல்ஸ் குறைந்து, இருதய துடிப்பு குறைந்ததாக டாக்டர்
வெங்கடேஷ் கூறினார். பின், குழந்தைக்கு ஆப்ரேஷன் ஏதும் செய்யவில்லை.
மூச்சு விடும் இயந்திரம் தன்னிடம் இல்லை எனக்கூறி, ஈரோடு ஜி.ஆர்.பி.,
மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். இரவு, 7:00 மணிக்கு
அக்குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். குழந்தை
இறப்பு குறித்து டாக்டர் வெங்கடேஷிடம் கேட்டபோது, 'குழந்தை
இறப்புக்கு தான் காரணமில்லை' என கூறுகிறார். இதுபற்றி விசாரித்து,
நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.
அவர்கள் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து, 10 நிமிடம்
தர்ணாவில் ஈடுபட்டனர். ஏ.டி.எஸ்.பி., தங்கவேல், டி.எஸ்.பி.,
முத்துகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். 'டாக்டர் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோட்டுக்கு அனுப்பியபோது உயிர்
இருந்ததாக டாக்டர்கள் கூறினர். ஈரோட்டில் உள்ள டாக்டர்கள், குழந்தை
இறந்து, 2 மணி நேரம் ஆகிவிட்டது என்றனர். டாக்டர் மீது நடவடிக்கை
எடுக்கும் வரை, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி
மருத்துவமனையில் உள்ள குழந்தை உடலை பெற மாட்டோம்' என்றனர்.
பரிசோதனை அறிக்கை வரட்டும். உங்களது மனு குறித்து
விசாரிக்கப்படும். நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்,' என
போலீசார் கேட்டு கொண்டதால், தர்ணாவை கைவிட்டனர்.
நாமக்கல் வெங்கடேஷ் நர்சிங் ேஹாம் தொலைபேசி எண்ணில் பேசியபோது, முழு
விபரத்தை கேட்டுவிட்டு, பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.