Arts, culture, entertainment and media
ஆன்லைன் லாட்டரி விற்ற இருவர் கைது
அரவக்குறிச்சி:சின்னதாராபுரம் அருகே, ஆன்லைன் லாட்டரி டிக்கெட் விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
சுற்றுவட்டார பகுதிகளில், ஆன்லைன் மூலமாக லாட்டரி டிக்கெட்
விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சின்ன
தாராபுரம் போலீசார் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு பணியில்
ஈடுபட்டனர்.
அப்போது, வாய்க்கால் தோட்டம் பகுதியில் ஆன்லைன் மூலம்
லாட்டரி டிக்கெட் விற்ற கரூர் காந்திகிராமம் பகுதியை சேர்ந்த
கார்த்திகேயன், 36, சின்னதாராபுரம் அருகே உள்ள ஊத்துப்பட்டி
பழனிசாமி, 45, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.