Politics
மனைவி குத்திய கணவர் கைது
மூணாறு, செப். 10- மூணாறு அருகே மாட்டுபட்டி எஸ்டேட்டைச் சேர்தவர் சதீஷ்குமார் 40. இவர், மூணாறு ராஜீவ் காந்தி
மூணாறு அருகே மாட்டுபட்டி எஸ்டேட்டைச் சேர்தவர் சதீஷ்குமார் 40. இவர், மூணாறு ராஜீவ் காந்தி காலனியில் மனைவி நிதியாராணி 31, இரண்டு பிள்ளைகளுடன் வாடகை வீட்டில் வசிக்கிறார்.
கணவன், மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார் பிள்ளைகள் கண் முன் மனைவியை கத்தியால் குத்த முயன்றார். அதனை நித்யாராணி தடுக்க முயன்றதால் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மூணாறில் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலைமறைவான சதீஷ்குமாரை, நேற்று மூணாறில் எஸ்.ஐ., ஷிப்ஜன்மாத்யூ கைது செய்தார்.