மண் அரிப்பால் சேதமான தார்ச்சாலை மண் கொட்டி சீரமைத்த மாணவியர்
அஞ்செட்டி; கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த மஞ்சுமலை கிராமத்தில், அரசு உயர்நிலைப்-பள்ளி செயல்படுகிறது. அங்கு படிப்பை முடிக்கும் மாணவ, மாணவியர், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிப்பிற்காக, 22 கி.மீ.,க்கு மேல் தொலைவி-லுள்ள அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்து செல்கின்றனர். மாணவ, மாணவியர் மற்றும் தொழிலாளர் வசதிக்காக, அஞ்செட்டி - மஞ்சு மலை இடையே, தினமும் காலை, மாலை நேரங்களில் அரசு பஸ் இயக்கப்படுகிறது.
அஞ்செட்டி - ஒகேனக்கல் சாலையில் பயணித்து, மஞ்சுமலை கூட்ரோடு பஸ் ஸ்டாப்பிலிருந்து, மலை மீது, 10 கி.மீ., பயணம் செய்தால், மஞ்சு-மலை கிராமத்திற்கு செல்ல முடியும். அரசு பஸ் இந்த வழியாக தான் மஞ்சுமலை கிராமத்திற்கு செல்கிறது. இந்த, 10 கி.மீ., துார தார்ச்சாலையும் மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக காணப்ப-டுகிறது. நேற்று முன்தினம் பெய்த மழையால், மஞ்சுமலை அருகே, சாலை வளைவில் மண் அரிப்பு ஏற்பட்டு, தார்ச்சாலை பெயர்ந்து மேலும் மோசமாகி விட்டது.அதனால், அரசு பஸ் மற்றும் மற்ற வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை உருவானது. அரசு பஸ்சில், அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று காலை பயணித்த மாணவ, மாணவியர், பஸ்சிலிருந்து இறங்கி, மண்வெட்டிகள் உதவி-யுடன், சாலையோரம் இருந்த மண், கற்களை அள்ளி போட்டு, சாலையை சீரமைத்தனர். அதன் பின் வாகன போக்குவரத்து சீரானது.
இது குறித்து, மஞ்சுமலை கிராம மக்கள் கூறு-கையில்,' பள்ளிக்கு செல்ல வேண்டிய நேரத்தில், சீருடையில் கையில் மண்வெட்டியை எடுத்து, சாலையை அமைக்கும் பணியில் மாணவ, மாணவியர் ஈடுபட்டனர். இது அவர்களிடம் சமூக அக்கறை உள்ளதை காட்டுகிறது. ஆனால், தளி சட்டசபை தொகுதியில் உள்ள மஞ்சுமலை கிரா-மத்திற்கு, பல ஆண்டுகளாக அதிகாரிகள் சாலை அமைத்து கொடுக்காமல் இருப்பது வேதனை-யாக உள்ளது. சரியான சாலை இல்லாததால், சரியாக பஸ்சும் வருவதில்லை. கல்வி கற்க வேண்டும் என்ற ஒரே ஆசையால், பள்ளி மாணவ, மாணவியரே சாலையை சீரமைத்து, பஸ்சில் பயணிக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. மாவட்ட நிர்வாகமும், அரசும் உடனடி-யாக தலையிட்டு, மஞ்சுமலை கிராமத்திற்கு சீரான சாலை வசதி செய்து தர வேண்டும்' என்-றனர்.