Sport
இங்கிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை: ஹாரி புரூக் சதம் விளாசல்

சவுத்தாம்ப்டன்: கேப்டன் ஹாரி புரூக் சதம் விளாச, இங்கிலாந்து அணி 119 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. சவுத்தாம்ப்டனில் முதல் போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற இலங்கை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணிக்கு டொனால்டு (12) ஏமாற்றினார். பின் இணைந்த பட்லர், கேப்டன் ஹாரி புரூக் ஜோடி கைகொடுத்தது. துனித் வெல்லாலகே வீசிய 5வது ஓவரில் 3 சிக்சர், 3 பவுண்டரி உட்பட 30 ரன் விளாசினார் புரூக். அபாரமாக ஆடிய பட்லர், 29 பந்தில் அரைசதம் கடந்தார்.
துஷ்மந்தா சமீபரா ஓவரில் வரிசையாக 2 பவுண்டரி விரட்டிய பட்லர், வணிந்து ஹசரங்கா பந்தை சிக்சருக்கு அனுப்பினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 128 ரன் சேர்த்த போது பட்லர் (80 ரன், 3X6, 8X4) அவுட்டானார்.
டாம் பான்டன் (10), வில் ஜாக்ஸ் (21) நிலைக்கவில்லை. மறுமுனையில் அசத்திய புரூக், 42 பந்தில் அரைசதம் விளாசினார். இங்கிலாந்து அணி 20 ஓவரில் 254/4 ரன் குவித்தது. புரூக் (114* ரன், 49 பந்து, 6X6, 10X4) அவுட்டாகாமல் இருந்தார்.
கடின இலக்கை விரட்டிய இலங்கை அணி 19 ஓவரில் 135 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. துனித் வெல்லாலகே (33), தசுன் ஷானகா (24) ஆறுதல் தந்தனர். இங்கிலாந்து சார்பில் சன்னி பேக்கர் 3, லியாம் டாசன், ஜேமி ஓவர்டன் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.