Arts, culture, entertainment and media
ஃபஹத் ஃபாசில் - பிரேம் குமார் படத்தின் வெளியீடு எப்போது?
ஃபகத் ஃபாசில் - பிரேம் குமார் இணைந்துள்ள படத்தின் வெளியீடு பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.
இயக்குநர் பிரேம் குமார் நடிகர் ஃபஹத் ஃபாசில் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் வெளியீடு பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து மெய்யழகன் படத்தை இயக்கினார்.
அப்படம் வெற்றி பெற்ற நிலையில், அடுத்ததாக விக்ரமை வைத்து படம் இயக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். ஆனால், அப்படம் கைவிடப்பட்டதால் நடிகர் ஃபகத் ஃபாசிலை வைத்து தனது அடுத்தப் படத்தை பிரேம் குமார் இயக்கி வருகிறார்.
வேல்ஸ் இண்டர்னேஷனல் தயாரிக்கும் இப்படத்தில் நடிகை ஷிவதா நாயகியாக நடிக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.
இந்த நிலையில், பெத்லகேம் குடும்ப யூனிட் என்ற மலையாளப் படத்தைத் தயாரித்துள்ள ஃபகத் ஃபாசில், அப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக சென்னை வந்தார். அந்த நிகழ்வில் பேசிய அவர், ” நாங்கள் எப்போதும் சிறந்த திரைப்படங்களைத் தயாரிக்க முயற்சி செய்கிறோம். 'பெத்லகேம் குடும்ப யூனிட்' ஒரு சிறப்பான திரைப்படம். இந்தப் படத்தை அனைவரும் கண்டிப்பாகப் பாருங்கள். இது மிகவும் அழகான படம்.
தமிழ் ரசிகர்கள் எப்போதும் நல்ல திரைப்படங்களைக் கொண்டாடுவார்கள். இந்தப் படம் ஏற்கனவே உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
அடுத்ததாக, இயக்குனர் பிரேம் இயக்கும் தமிழ்ப் படத்தில் நான் நடித்துள்ளேன். அந்தத் திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகும். அப்போது உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பேன் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
இதன்மூலம், பிரேம் குமார் - ஃபகத் ஃபாசில் இணையும் திரைப்படம் டிசம்பரில் வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது.
Release announcement for the Fahadh Faasil - Prem Kumar film!
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.