அதானியை பின்னுக்குத் தள்ளிய ’டிக் டாக்’ நிறுவனர்; ஏஐ தான் காரணமா?

ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானியைப் பின்னுக்குத் தள்ளி ’டிக் டாக்’ நிறுவனர் ஜாங் யிமிங் முதலிடம் பிடித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ’ப்ளூம்பெர்க்’ நிறுவனம் குறிப்பிட்ட கால இடைவெளியில் உலகப் பணக்காரர்களின் பட்டியலை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. அதற்காக, இந்த நிறுவனம் உலக பணக்காரர்களின் சொத்துக்களை ஆய்வு செய்து, அதற்கேற்ப பணக்காரர்களின் வரிசையில் மாற்றம் செய்து பட்டியலை வெளியிடும். அந்த வகையில், கடந்த புதன்கிழமை அன்று அந்த நிறுவனம் பட்டியலை வெளியிட்டது.
முன்னதாக, ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் கௌதம் அதானி தொடர்ந்து முதலிடம் பிடித்துவந்தார். தற்போது, அதானியைப் பின்னுக்குத் தள்ளி டிக்டாக் செயலியின் நிறுவனரான ஜாங் யிமிங் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இவரது சொத்து மதிப்பு 13 பில்லியன் டாலராக இருந்த நிலையில், கடந்த 7 ஆண்டுகளில் அது 105 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், 120 பில்லியன் டாலராக இருந்த அதானியின் சொத்துமதிப்பு, தற்போது 105 பில்லியன் டாலராக உள்ளது. எனினும், சில மில்லியன் டாலர்கள் வித்தியாசத்தில் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக ஜாங் யிமிங் உயர்ந்துள்ளார். டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்ஸின் வளர்ச்சி மட்டுமின்றி டூபாவோ, சீடான்ஸ் என்கிற ஏஐ கருவிகளை உருவாக்கி ஏஐ துறையிலும் பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளார்.
இவரது, இந்த வளர்ச்சிக்கு, டிக்டாக் நிறுவனமும் மிக முக்கிய காரணமாகும். குறிப்பாக, பல நாடுகளில் டிக்டாக் செயலிக்குத் தடை விதிக்கப்பட்டாலும், அதன் உலகளாவிய பயன்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு முதலீடு போன்றவை அவரை பெரும் பணக்காரராக மாற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)