கரூர் அருகே சிக்னல் கம்பம் வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
கரூர்; கரூர் அருகே, புதிதாக தானியங்கி சிக்னல் விளக்-குகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் - திருச்சி சாலை, புலியூரில் தனியாருக்கு சொந்தமான சிமென்ட் ஆலை உள்ளது. மேலும், அப்பகுதியில் உப்பிடமங்கலம் பிரிவு சாலை செல்கிறது. அதில், போக்குவரத்தை சீர் செய்-யவும், விபத்தை தடுக்கவும், சோலார் சிஸ்டம் உதவியுடன் தானியங்கி சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டது. ஆனால், அந்த சிக்னல் விளக்கு கம்பம், பல மாதங்களாக சேதம் அடைந்-துள்ளது.இதனால் கரூரில் இருந்து திருச்சி செல்லும் வாகனங்கள், உப்பிடமங்கலம் பகுதியில் இருந்து கரூர் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கி கொள்-கின்றன. எனவே, சேதமடைந்த சிக்னல் கம்-பத்தை மாற்றி விட்டு, புதிதாக சிக்னல் கம்பம் அமைத்து, விளக்குகளை எரிய வைக்க நடவ-டிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.