கொல்லிமலை அடிவாரத்தில் அறுவடைக்கு தயாரான கரும்பு
சேந்தமங்கலம்:கொல்லிமலை அடிவாரம், காரவள்ளி, சின்ன காரவள்ளி, நடுக்கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள்

அடிவாரம், காரவள்ளி, சின்ன காரவள்ளி, நடுக்கோம்பை உள்ளிட்ட
பகுதிகளில் உள்ள மக்கள் பெரும்பாலும் மா, பாக்கு, தென்னை உள்ளிட்ட
பயிர்களை மட்டுமே சாகுபடி செய்து வருகின்றனர். ஒரு சில விவசாயிகள்
மட்டுமே கரும்பு பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, சின்ன
காரவள்ளி பகுதியில் உள்ள விவசாயி, 10 ஏக்கர் பரப்பளவில் கரும்பு
வகைகளை சாகுபடி செய்துள்ளார்.
12 மாதங்கள் ஆகும். டிச., முதல் மே வரை, மூன்று பருவங்களில் கரும்பு
வகைகளை சாகுபடி செய்ய உகந்த காலமாக கருதப்படுகிறது. தற்போது சின்ன
காரவள்ளி பகுதியில் சாகுபடி செய்துள்ள கரும்புகள் அனைத்தும்
அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த கரும்புகளை அறுவடை செய்து
மதுரை திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்ய
ஆயத்தமாகி வருகின்றனர்.