ரூ.300 கடன் பெற்று திருப்பி தராதவருக்கு அடி உதை
திருப்போரூர், செப். 9– கோவளம் அருகே கொடுத்த திருப்பி தராத 28 வயது வாலிபரை, கிரிக்கெட் மட்டையால் தாக்கிய
கோவளம் அருகே கொடுத்த திருப்பி தராத 28 வயது வாலிபரை, கிரிக்கெட் மட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்போரூர் அடுத்த கோவளம் ஊராட்சியை சேர்ந்தவர் தினேஷ், 28. இவர், அதேபகுதியில் பேன்சி கடை நடத்தி வரும் பேராராம், 35, என்பவரிடம் 300 ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தினேஷிடம் கொடுத்த பணத்தை பேராராம் திருப்பி கேட்ட போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த பே ராராம் கிரிக்கெட் மட்டையால் தினேஷின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது இதை தட்டிகேட்ட நாராயணன், 60, என்பவரையும் தாக்கியுள்ளார்.
காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேளம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.