Lifestyle and human interest
சேதமடைந்த குடிநீர் தொட்டி இடித்து அகற்ற கோரிக்கை
சித்தாமூர், செப். 10– பெருக்கரணை ஊராட்சியில் சேதமடைந்து விபத்து ஏற்படும் நிலையில் உள்ள, மேல்நிலை
பெருக்கரணை ஊராட்சியில் சேதமடைந்து விபத்து ஏற்படும் நிலையில் உள்ள, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்யூர் அடுத்த பெருக்கரணை ஊராட்சியில், குளக்கரை அருகே 30 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. இவை பராமரிப்பு இன்றி சேதமடைந்ததால், இரு ஆண்டுகளுக்கு முன், 18.42 லட்சம் ரூபாயில் புதிதாக
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. இந்நிலையில் பழைய குடிநீர் தொட்டி விரிசலடைந்து, அபாய நிலையில் உள்ளது.
எனவே, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், சேதமடைந்த குடிநீர் தேக்கத் தொட்டியை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.