Lifestyle and human interest
வலைபாயுதே: Malavika Mohanan, PV Sindhu
ஏதோ ஒன்றுக்குக் காத்திருக்கும்போது, நாம் இன்றைய தினத்தின் மகிழ்ச்சியை இழக்கிறோம்.

கட்டளையில் இருக்கும் கடினத்தைவிட, கோரிக்கையில் இருக்கும் கனிவுக்கே கதவுகள் எளிதில் திறக்கின்றன!
அமைச்சர்களின் வீட்டில் ரெய்டு பண்றப்பதான் அவங்களுக்கு எங்கெல்லாம் சொத்து இருக்கு, எங்கெல்லாம் சொந்தம் இருக்குன்னு தெரிஞ்சிக்க முடியுது!
ஒரு வண்ணத்துப்பூச்சியைப் பிடிக்கும் சிறுமியைப்போல் இந்த வாழ்க்கையை எதிர்கொள்ள நினைக்கிறேன், ஆனால் வாழ்க்கையோ ‘தூள்’ படம் சொர்ணாக்காவைப் போல் என்னெதிரே நிற்கிறது.
விஜய் முதல்வரான பிறகு, சட்டசபை நிகழ்வுகளை அதிகம் பேர் பார்க்கின்றனர். உண்மைதான். அதனால் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு வரும் என்றெல்லாம் தோன்றவில்லை. டி.வி சீரியல்கள் பார்க்கிற பெருங்கூட்டத்தை இப்போது சட்டசபை நிகழ்ச்சிகளுக்கும் இழுத்திருக்கின்றனர். `அவரா, இவரா...’ என்று சவால்விடும் காட்சிகளாக்கி, அரசியலைச் சுருக்கிவிடும் மோசடியாகவே தெரிகிறது.
பாலியல் வன்முறை வழக்கில் என்ன சமரசம்... வழக்கு நிரூபிக்கப்பட்டது, படவில்லை என்பதைத் தாண்டி அங்கே சட்டப்படி நிலைப்பாடு இல்லை. திங்கள்கிழமை ஆக்ஷனோடு சட்டப்பேரவையில் சொற்பொழிவாற்ற இதைச் செய்திருக்கிறார்கள் போலும்.(அதுதான், `கேள்வி நேரம் அனுமதிக்கப்படாது’ என்கிறாரே சபாநாயகர்!)
எல்லாப் பாலியல் வன்முறை வழக்குகளிலும் நாட்டாமை சொம்போடு சமரசம் செய்து வைப்பீர்களா என்ன... Our legal system should not do this.
நேற்று மாலை 5 மணிக்கு, எனக்கு நீதி வேண்டும் என ஒரு நேர்காணல் கொடுத்திருக்கிறார் அந்தப் பெண். இரண்டு மணி நேரத்துக்குள் சமரசம் எட்டப்பட்டதாக கோர்ட் சொல்லுகிறது.
டீச்சர்னா மலர் டீச்சர் ஞாபகம் வந்தா Gen Z. நாட்டாமை டீச்சர் ஞாபகம் வந்தா 90ஸ் கிட்ஸ்.
“இப்ப எதுக்குடா கூண்டைத் திறந்துவிட்ட?”
“பறவையைப் பறக்க விடு. வாழ்வா, சாவா என்பதை அதுவே முடிவு பண்ணட்டும்.”
“அதுக்கு ஏண்டா கறிக்கு வெச்சிருந்த கோழியைத் திறந்துவிட்ட?”
தெரிந்த இளம்பெண் ஒருவர் இரண்டு, மூன்று நாள்களாக முக வாட்டத்துடன் இருந்தார். வழக்கம்போல் இல்லை. சிறிய சிரிப்புக்கூட முகத்தில் இல்லை. எப்போதும் துயரத்தின் சாயல். மனம் கேளாமல், வீட்டுப் பிரச்னையோ, என்னவோ என்றெண்ணி “என்னம்மா... டல்லாயிருக்கே?” என்றேன். “வீட்டுக்காரர்கூட ஏதாச்சும் சண்டையா... அடிச்சிட்டாரா?” என்றேன். “நீங்க கெஸ் பண்ணது கரெக்ட்டுதான். ஆனா நான்தான் அடிச்சிட்டேன். மனசு ஒரே கஷ்டமாயிருக்கு...” அடிப்பாதகத்தி!
ஓர் ஆய்வில், ஆண்களைவிட, பெண்களே அதிக சதவிகிதத்தில் விவாகரத்து கோரி வழக்கைத் தொடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதை ‘பெண் சம்பாதிக்க ஆரம்பித்தால் விவாகரத்து அதிகரிக்கும்' என்பதாகப் பொருள் கொள்வதைவிட, பொருளாதார சுயநிறைவு பெண்களின் ‘Decision-Making Power-ஐ' அதிகரித்திருக்கிறது என்பதாகத்தான் புரிந்து கொள்ள முடிகிறது. புரிந்துகொள்ளவும் வேண்டும்.
அதே Logic-ஐ ஆண்களுக்கும் பொருத்திப் பார்க்க வேண்டும். ஒரு ஆணும் சரி, பெண்ணும் சரி... பொருளாதாரரீதியாக சுயநிறைவு பெற்றிருப்பது அவர்களுக்குக் குடும்பத்தைவிட்டு வெளியேறுவதற்கான வசதியை மட்டும் கொடுப்பதில்லை; பல நேரங்களில் குடும்பத்தைத் தாங்கிக்கொண்டு, தங்களுடைய விருப்பங்களையும் தியாகம் செய்துகொண்டு, உறவைத் தொடர்ந்துகொண்டு செல்லும் பொறுப்பையும் கொடுக்கிறது.
அதனால் பொருளாதார சுயநிறைவைப் பெண்ணுக்கு ஒரு ‘Empowerment' என்று பார்க்கிறோம் என்றால், அதே அளவுகோலில் ஆணின் பொருளாதார சுயநிறைவையும் ஒரு ‘பொறுப்பை ஏற்கும் வலிமையாக' பார்க்க வேண்டும். ஒருவரிடம் இருக்கும் சுதந்திரத்தின் உண்மையான மதிப்பு, அவர் எப்போது வெளியேறுகிறார் என்பதில் மட்டும் இல்லை; வெளியேற முடிந்த நிலையிலும், எதற்காகத் தங்குகிறார் என்பதிலும் இருக்கிறது.
ஏதோ ஒன்றுக்குக் காத்திருக்கும்போது, நாம் இன்றைய தினத்தின் மகிழ்ச்சியை இழக்கிறோம்.
`ஓய்வெடுக்கவோ, திருமணங்கள் நடத்தவோ வெளிநாடுகள் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.’ - மோடி ஜி
`உயரிய விருது’ வாங்குவதற்குப் போகலாங்களா ஜி!
குடும்பம் என்ற சட்டமன்றத்தில் மனைவிதான் முதலமைச்சர்; கணவர் சபாநாயகர்; (மனைவியின்) மாமியார்தான் எதிர்க்கட்சித் தலைவர்!
அதனால்தான், மாமியார் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல், மனைவி அடிக்கடி வீட்டைவிட்டு வெளிநடப்பு செய்கிறார்!
