ஆர்.வி.எஸ். கல்லூரியில் ஆசிரியர் பணிச்சிறப்பு விருது விழா
சூலுார்: சூலுாரில் உள்ள ஆர்.வி.எஸ். கல்விக் குழுமத்தின் சார்பில், ஆர்.வி.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
சூலுார்: சூலுாரில் உள்ள ஆர்.வி.எஸ்.
கல்விக் குழுமத்தின் சார்பில், ஆர்.வி.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் பணிச்சிறப்பு விருது வழங்கும் விழா கலாம் அரங்கில் நடந்தது. சிறப்பாக பணியாற்றிய 50 ஆசிரியர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.சிறப்பு விருந்தினர்களாக இந்திய அரசு ஆயுஷ் அமைச்சக உறுப்பினர் ஹரிதாஸ், கோவை வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, பங்கேற்றனர். அவர்கள் கல்வியின் முக்கியத்துவம், குருவின் கடமை, ஆசிரியர் பணியின் சிறப்பு, பணிவு மற்றும் அறிவின் அவசியம் குறித்து பேசினர். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சிவக்குமார், செயலாளர் சாரம்மாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.