Arts, culture, entertainment and media
புத்தகத் திருவிழா விழிப்புணர்வு
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் இலக்கிய களம், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நுாலகம் இணைந்து நடத்தும் 13வது புத்தகத் திருவிழா அக்.,22 முதல் நவ.,2 வரை நடக்கிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஒட்டன்சத்திரம் ஒன்றிய அளவில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு கதை சொல்லல், ஓவியம் வரைதல் போட்டி நடந்தது.
ஒட்டன்சத்திரம் கிறிஸ்தவ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த போட்டிக்கு செயற்குழு உறுப்பினர் பரமேஸ்வரி தலைமை வகித்தார். ஆசிரியர் பாண்டியராஜன் வரவேற்றார். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சண்முகநாதன், வட்டாரக் கல்வி அலுவலர் சரஸ்வதி பேசினர். பள்ளி முதல்வர் பிரகாசம் போட்டிகளை துவக்கி வைத்தார். ஆசிரியர் செல்வராஜ் ஒருங்கிணைத்தார். கருத்தாளர் உமா நன்றி கூறினார்.