Religion
கிருஷ்ண ஜெயந்தி, தொடர் விடுமுறை: திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்.. நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரி...

கிருஷ்ண ஜெயந்தி, தொடர் விடுமுறை ஒட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 2 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னிசலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வார விடுமுறை நாட்களில் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையார் தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் வந்து வழிபாடு செய்கின்றனர்.
இந்நிலையில், இன்று கிருஷ்ண ஜெயந்தி, தொடர் விடுமுறை ஒட்டி நேற்று இரவு முதலே ஆந்திரா கர்நாடகா, தெலுங்கானா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு குவிந்துள்ளனர். இன்று அதிகாலை 5.30 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று 6 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு கோவில் உள்ளே அனுமதித்தனர்.
ராஜகோபுரம் வழியாக 2 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனத்திற்கு உள்ளே செல்லக்கூடிய பக்தர்கள் அண்ணாமலையார் உண்ணாமலைய அம்மனை தரிசனம் செய்து பின்னர் திருமஞ்சன கோபுரம் விதி வழியாக வெளியேற்றப்பட்டனர். அம்மணி அம்மன் கோபுர வீதி வழியாக 50 ரூபாய் தரிசன கட்டண வரிசையில் 1 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பக்தர்கள் கோயில் உள்ளே சென்று தரிசனம் முடித்து திருமஞ்சன கோபுர வீதி வழியாக வெளியேற்றப்படுகின்றனர். கோவில் உள்ளே வருகின்ற பக்தர்களுக்கு மற்றும் சாமி தரிசனம் செய்யக் கூடிய வரிசைகளில் கோவில் நிர்வாகம் சார்பில் குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துள்ளனர்.
